சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ - 5

  • Tamil Folk
சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ - 5

Lyrics

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

பல்லவன் குழைந்ததின் பொற்பதமோ

சித்திரை மல்லையின் விக்ரகமோ

கடற்கரை ரதத்தில் அவள் உற்சவமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

பாண்டியன் மதுரையின் அற்புதமோ

மலரது அழகினில் தவறிடுமோ

அவளது தமிழினில் தப்பிதமோ

சங்கத்தின் பிறப்பினில் கற்பிதமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

சோழனின் தில்லையின் அம்பலமோ

நித்திரையில் காஞ்சியின் சொற்பதமோ

அந்திரையில் குடந்தையின் நிகற்பதமோ

முத்திரையில் தஞ்சையின் அவள் கோபுரமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

சிலைபோல் செய்யும் கலையாவுமோ

அலைபோல் உய்யும் கவியாகுமோ

அலங்காரமாய் நின்ற சிருங்காரமோ

அகங்காரமே தோற்கும் அவள் முகபாவமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

வளைந்தாடும் அவள் நதியாவுமோ

களைந்தாடும் இவள் ஜதியாவுமோ

குதித்தாடும் இவள் பதியாவுமோ

மிதித்தாடும் அவள் சதியாவுமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

உருகிய கலை கனிரசமோ

பழகிய மொழி பழரசமோ

இளகிய வழி பரவசமோ

முனகிய செவ்வாய் அவசரமோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

யாழிசையோ குரல் தேனிசையோ

ஏழிசையோ விரல் மெல்லிசையோ

கருவிழியோ ரா மின்மினியோ

வெண் மதியோ அவள் கண்மணியோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

தவழ்வதில் அவள் பைகிளியோ

பரவசத்தில் நாணல் மரக்கிளையோ

கவிழ்ந்ததில் ஊடல் பனித்துளியோ

அவள் கலைந்ததில் கூடல் மழைத்துளியோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ

அசைவதில் ஐப்புலன் நாணங்களோ

இசைவதில் செம்புலன் நளினங்களோ

மறந்ததில் நானிலன் புள்ளினங்களோ

துறந்ததில் வானிலன் அவள் எண்ணங்களோ

சிற்பமோ சித்தன்னவாசல் சித்திரமோ

சித்திரை மல்லையின் அவள் விக்ரகமோ