
என்னருகில் நீ
latin fusion, avantgarde, reggeton, candy pop, solo male vocal, high quality audio, SPATIAL AUDIO, THX

என்னருகில் நீ
latin fusion, avantgarde, reggeton, candy pop, solo male vocal, high quality audio, SPATIAL AUDIO, THX
Lyrics
Lyrics : Jeevaguru M
(Inspired from lady (Cover) by Youri)
##############################
Verse 1
பெண்ணே
உனைக் கண்ணின் இமையாய் காத்தேன்,
என்னுயிர் நீயே!
உன்னால் நானின்று வாழ்கிறேன்,
என்னுயிர் உனதே!
Verse 2
என் அன்பே
என் காதலை சொல்ல நாட்கள் போதாது,
இன்னொரு ஜென்மமும் கடன் கேட்பேன்!
Chorus
இருந்தும் விட்டு போனாய் என்னை,
உன் காதலில் மூழ்கி தொலைந்தவனை.
ஓ...ஓ...
நீரும் மீனை பிரிவதா?
தீயில் நானும் எரிவதா?
Instrumental Break
Extended Instrumental Interlude
Verse 3
கண்ணே
என் காட்டில் மலர்ந்த குறிஞ்சி மலர் நீ,
வாசம் மட்டும் விட்டு எங்கு சென்றாயோ நீ?
Verse 4
ஓ பெண்ணே
காலத்திற்கும் கண்கள் உன்னை தேடுதே,
காதல் கொண்ட என் மனம் ஏங்கிடுதே!
Chorus
என் கண்களுக்கு
உனைத் தவிர எதுவும் தெரியாதே!
நம் காதலைப் போல்
உலகில் வேறு எதுவும் கிடையாதே!
ஓ... ஓ...
ஓ...ஹோ...ஹோ... என்னருகில் நீயும் இல்லை...
என்னுயிர் என்னிடம் இல்லை!
Outro
பெண்ணே
உன் காதல் மட்டும் போதுமே,
என் அருகில் நீயும் வேண்டுமே!
என் அன்பே
நீ விலகி சென்றால் கூட,
என் காதல் என்றும் நீயே!
என் காதலே!
(ஓ... ஓ...)
