MusicMint AI Music Generator Logo
MusicMint

Podhavillaye

female vocals, slovak folk

Pradeep ·4:00

Lyrics

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

நாள் முழுக்க உன்னை…

கண்கள் தின்ற பின்னும்…

உந்தன் சொற்கள் மீது…

நான் நனைந்த பின்னும்…

இன்னும் இன்னும் பக்கம் வந்தும்…

கிட்ட தட்ட ஒட்டி கொண்டும்…

மூச்சில் தீயும் பற்றி கொண்டும்… ம்ம்…

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

தேநீரை நாம் உறிஞ்சும்…

மாலை போதாதே…

கை கோர்த்து போகும்…

இந்த சாலை போதாதே…

என் எண்ண விண்கலம்…

நான் சொல்லவே…

கைபேசி மின்கலம் போதாதடி…

உன் அழகை பருக…

என் கண்கள் போதாதடி…

என் நிலையை எழுத…

வானங்கள் போதாதடி…

நேர முள்ளை பின் இழுத்தும்…

வாரம் எட்டு நாள் கொடுத்தும்…

சுற்றும் பூமியை தடுத்துமே… ஹே…

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

கூழாங்கல் கூவுகின்ற…

கானம் போதாதே…

கூசாமல் கூடுகின்ற…

நாணம் போதாதே…

தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்…

ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா…

நம் கனவை செதுக்க…

பிறந்தும் போதாதுடா…

இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா…

குட்டி குட்டி கோவம் கொண்டு…

கட்டி முட்டி மோதி கொண்டு…

திட்டி திட்டி தீர்த்த பின்னும்…

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

சுவாச பையில் உந்தன்…

வாசம் பூட்டி வைத்தும்…

நெஞ்ச ஏட்டில் இன்னும்…

உன் பேரை தீட்டி வைத்தும்…

பாடல் தீர்ந்து போன பின்னும்…

மௌனம் கூட தீர்ந்த பின்னும்…

கோடி முத்தம் வைத்த பின்னும்… ம்ம்…

போதவில்லையே போதவில்லையே…

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…

Like this song? Create something similar