MusicMint AI Music Generator Logo
MusicMint

புதிய நாள்

male vocal, soulful, expressive tone, Folk-Rock / Latin Pop style, blending acoustic guitar-driven melodies with warm, romantic lyricism, Folk-Rock, with a strong emphasis on acoustic instrumentation and lyrical intimacy in Cuban roots, Prominent acoustic guitar textures create a soft, melodic foundation, romantic and introspective, evoking tenderness and longing, slower tempo and lyrical phrasing make it feel like a heartfelt serenade, acoustic guitar at work,

Govind Swaminathan·3:48

Lyrics

Interlude

Music

Verse

புதிய நாள் என் முன்னே

கதவை திறந்து வெளியே வந்தேன்

பசுமை நிறைந்த வனம் அங்கு

மரங்கள் சில பல அதில் உண்டு

Pause

தொலைவில் பறக்கும் சில பறவை

பார்த்ததில்லை நாட்டில் அவை

ஓடும் அணில் மணல் மேல் எங்கும்

விழுந்த பழங்களை எடுத்து உண்ணும்

{Pause]

Music

பைசன் ஒன்று அசைபோடும் அங்கு

மான்கள் சில அதன் அருகில் உண்டு

நரி ஒன்று எங்கோ சிலை போல் நிற்கும்

தகுந்த நேரம் தாக்க பார்க்கும்

Pause

நடந்தேன் தயங்கி சுற்றி பார்க்க

நாட்டை போல அமைப்புகள் இல்லை

எல்லாம் கிடைக்கும் பரந்து இங்கு

சீரான அழகு அதில் உண்டு

Pause

Music

நிழல் ஒன்று என்னை கடக்கும்

திரும்பி பார்க்க ஒட்டகச்சிவிங்கி

பார்க்கும் என்னை அது ஒரு நிமிடம்

கடந்து தன் வாழ்வை துவங்கும்

Pause

நெருங்கும் உணவை உடும்பு உண்ண

ஓடும் காட்டுப்பன்றி அதை துரத்த

உறங்கும் பாம்பு மரத்தில் மேலே

ஏங்கும் முட்டைக்கு கூட்டின் உள்ளே

Pause

Music

தயக்கம் உண்டு தொடர்ந்து நடக்க

அனைத்தும் அறிந்த மனிதனாய் இருக்க

பயம் ஒன்று மனதில் இறங்கும் மெல்ல

எது என்னை தாக்கும் ஒளிந்து இருக்க

Pause

சட்டம் ஒன்று அங்கு உணர்ந்தேன்

எல்லைகள் மதிக்கும் விலங்கை கண்டேன்

ஒருவர் எல்லை ஒருவர் மதிக்க

எல்லாம் அங்கு சிறப்பாக இயங்கும்

Pause

Music

ஒருவரின் உணவு ஒருவராய் இருக்க

விழிப்புடன் இயங்கும் எல்லாம் சுற்றி

சற்று தடுமாறும் நிலை ஒன்று வந்தால்

அன்று நிலவு மறையும் தன்னால்

Pause

தொலைவில் பறக்கும் சில பறவை

பார்த்ததில்லை நாட்டில் அவை

ஓடும் அணில் மணல் மேல் எங்கும்

விழுந்த பழங்களை எடுத்து உண்ணும்

Pause

Music

புதிய நாள் என் முன்னே

கதவை திறந்து வெளியே வந்தேன்

பசுமை நிறைந்த வனம் அங்கு

மரங்கள் சில பல அதில் உண்டு

Interlude

Music

Like this song? Create something similar